செங்கம் அருகே பரபரப்பு இறந்தவரின் உடலை புதைக்க வழி விடாததால் மயானத்தில் பரபரப்பு

செங்கம் அருகே பரபரப்பு இறந்தவரின் உடலை புதைக்க வழி விடாததால்  மயானத்தில் பரபரப்பு
செங்கம்இறந்தவரின் உடலை புதைக்க வழி விடாததால் மயானத்தில் பரபரப்பு
செங்கம் அருகே பரபரப்பு இறந்தவரின் உடலை புதைக்க வழி விடாததால்  மயானத்தில் பரபரப்பு

இறந்தவரின் உடலை புதைக்க வழி விடாததால்  மயானத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கரிப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த நடுபையன் மகன் விஜயன் என்பவர் கல் உடைக்கும் கூலித்தொழிலாளி இவர் கடந்த ஆறு மாதமாக பக்கவாதம் வந்து உடல்நிலை சரி இல்லாமல்  வந்த நிலையில் அவர் இன்று இறந்தார் இந்நிலையில் அவரை நல்லடக்கம் செய்ய அத்தனூர்  மயான பாதைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்  அப்போது அந்தனூர் பகுதியில்  வசிக்கும் மக்கள்அவர் அருந்ததி சாதியை சேர்ந்த  என்பதால் அவ்வழியாக இறந்தவரை எடுத்துச்செல்ல கூடாது என்று கூறியுள்ளனர் தடுத்து நிறுத்தியுள்ளனர்  இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சவத்தை செர்கரத வாகனத்திலேயே  சுமார் நான்குமணி நேரமாக மயானத்தில் அடக்கம் செய்யாமல் காத்திருந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வராததால் சவத்தை  சாலையில் வைத்து   போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறிய பிறகு  தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த மேல்செங்கம் காவல்துறையினர் மற்றும் செங்கம் காவல்  ஆய்வாளர் சாலமன் ராஜா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம்  இறந்தவர்களின் உறவினரிடமும் சமரசமாக பேசி இறந்தவரின் உடல் நல்லடக்கம் செய்தனர்  இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருப்பதால் மயான இடத்தை வருவாய்த்துறையினர் அளந்து கொடுப்பதாக கூறி இதுவரை  எவ்வித நடவடிக்கை எடுக்காததால் இச் சம்பவம்  தொடர்கதையாகி வருவதால் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்