குப்பைகளை எரித்து சுகாதாரக்கேடு செய்யும் நகராட்சி திருமங்கலம் மக்கள் வேதனை

குப்பைகளை எரித்து சுகாதாரக்கேடு செய்யும் நகராட்சி திருமங்கலம் மக்கள் வேதனை
குப்பைகளை எரித்து சுகாதாரக்கேடு செய்யும் நகராட்சி திருமங்கலம் மக்கள் வேதனை

குப்பைகளை எரிப்பதால் குடியிருப்புவாசிகள் அவதி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருமங்கலத்தில் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி குற்றச்சாட்டு தெரிவித்தனர் மேலும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை சேகரிக்கும் இடம் திருமங்கலம் - உசிலம்பட்டி சாலையில் உள்ளது இந்த நிலையில் திருமங்கலம் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினந்தோறும் கொட்டி தரம் பிரிப்பது வழக்கம் இதில் பிரிக்கப்பட்ட குப்பை கழிவுகள் தவிர மற்ற கழிவுகளை அப்படியே கொட்டி தீவைத்து எரிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் வீணாகும் குப்பை கழிவுகளில் மருத்துவ கழிவுகள் மற்றும் கொரோனா பரிசோதனைக்கு  பயன்படுத்தும் கழிவுகள் என அனைத்து கழிவுகளையும் கொட்டி தீவைப்பதால் அதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் குப்பை சேகரிப்பு மையத்தின் அருகில் உள்ள தமிழ் தாய் நகரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்கு உள்ளதாக குற்றச்சாட்டு வைத்தனர் புகை மூட்டத்தால் சிறிய குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சுவாச கோளாறு ஏற்படுகிறது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர் மேலும் தற்போது காற்றுக் காலம் என்பதால் புகை மூட்டம்  அதிகரிப்பதாகவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளுக்கு தீ வைக்கும் பணியை நிறுத்த வேண்டுமெனவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்