2-மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு

2-மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு
2-மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு
2-மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு

2-மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவு வெளியிடப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது .

ரிலையன்ஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் லைப் சயன்ஸ் நிறுவனம் புது வகையான கிட் ஒன்றினை வடிவமைத்துள்ளது

 

கொரோனா வைரஸின் 100க்கும் மேற்பட்ட மரபுக் கூறுகளை ஆராய்ந்து தனித்துவம் வாய்ந்த தொழில் நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே இந்த கிட் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் லைப் சயன்ஸ், இதற்கு ‛ஆர்-கிரீன் கிட்' என்று பெயரிட்டுள்ளது. இந்த கிட் கொரோனா வைரஸின் இ-ஜீன், ஆர்-ஜீன், ஆர்டி ஆர்பி ஜீன்களை கண்டறிந்து செயல்படக் கூடியவை. இச் சோதனை கிட்டிற்கு ஐ.சி.எம்.ஆர்., இன்னும் சான்று அளிக்கவில்லை. 

இருப்பினும் இதை கையாள்வது மிகவும் எளிது. 98.8 சதவீதம் துல்லியமான முடிவுகளை இதன் மூலம் அறியலாம் என்று ரிலையன்ஸ் துணை நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

.உசிலை.P.M.தவசி

தமிழ் ஒளி செய்திகள்