பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாதா சாலை

பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாதா சாலை
எழுமலை J. மீனாட்சி புரம் சாலை
பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாதா சாலை
பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாதா சாலை
பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாதா சாலை

மதுரை:  உசிலம்பட்டி அருகே ஜோ. மீனாட்சி புரம் கிராமத்திற்கு செல்லும் எழுமலை மீனாட்சி புரம் சாலை கடந்த ஆறு வருடங்களுக்கு  முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக பேருந்து வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானவர்கள் போக்குவரத்து வசதிக்காக தனது இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோவையும் பயன்படுத்தி வருகின்றனர். 

இப்பகுதியில்  ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் இந்த சாலையில்  மாலை நேரங்களில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் தனியாக வருபவர்கள் அச்சத்துடனும் அந்நேரங்களில் அச்சாலையில் செல்வதையே பெரும்பாலான மக்கள் தவிர்க்கின்றனர். 

இந்த சாலையினை சரிசெய்து, பேருந்து போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தி தருமாறும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

P. வேல் முருகன் 

தமிழ் ஒளி செய்தியாளர்.