உசிலம்பட்டி பகுதியில் மரக்கன்றுகளை வளர்க்கும் மணமக்கள்

உசிலம்பட்டி பகுதியில் மரக்கன்றுகளை வளர்க்கும் மணமக்கள்
திருமண நிகழ்ச்சி
உசிலம்பட்டி பகுதியில் மரக்கன்றுகளை வளர்க்கும் மணமக்கள்

உசிலம்பட்டி :  உசிலம்பட்டி வட்டாரம் பொதுவாகவே வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இதில் இயற்கை வளங்களை காப்பாற்றும் சமூக பொறுப்புடன்,  இங்கு வசிக்கும் மக்கள்  பெரும்பாலானவர்கள் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை ஊக்கப்படுத்தும் வகையில்  உசிலம்பட்டி  பசுமை கரங்கள், தமிழ் ஒளி தொலைக்காட்சி போன்ற சமூக அமைப்புகளும் தங்களது பங்கினை அளிக்கின்றனர். 

உசிலம்பட்டி பகுதியில் பொதுவாக திருமண சுப விஷேசங்களில் பாரம்பரிய முறையில் சீர்வரிசை, மொய் செய்வது வழக்கம். 

ஆனால் இன்று காலையில் உசிலம்பட்டியில்  நடந்த திருமண சுப நிகழ்ச்சியில்  மணமக்கள்  திரு. உசிலை சேகரன் திருமதி. மீனா ஆகிய தம்பதியினர் சிறப்பு விழிப்புணர்ச்சியாக மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர்.

திருமண நிகழ்ச்சிகளில்  செல்பி எடுத்து STUTUS  போட்டால் போதும் என்று நினைக்கும்  இக்காலத்து இளைஞர்கள் மத்தியில் , வருங்கால சந்ததியினருக்கு இயற்கைவளத்துடன் வாழ  வழிவகுக்கும் இவர்களின் விழிப்புணர்ச்சியை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது  மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

 

P. வேல்முருகன் 

தமிழ் ஒளி செய்தியாளர். 

+919159555110