மதுரை மேற்கு, 12 யூனியன் விவசாயிகளுக்கு கூட்டுபண்ணையம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை மேற்கு, 12 யூனியன் விவசாயிகளுக்கு கூட்டுபண்ணையம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி
விவசாயிகள்

ஈரோடு:துல்லிய பண்ணை உழவர்                      உற்பத்தியாளர் நிறுவனம் 

தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை மதுரை மேற்கு வட்டாரம்,மதுரை மாவட்டம். 

மதுரை மேற்கு வட்டாரம்,12 யூனியன் விவசாயிகளுக்கு கூட்டுபண்ணையம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி முகாம் கடந்த (27/11/2019) அன்று மதுரை மேற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி. கமலா லெட்சுமி  தலைமையிலும்,  வழிகாட்டுதலின்படியும் திருமதி. காந்திமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் திருமதி. மகாலெட்சுமி மற்றும் செல்வி லாவண்யா ஆகியோர்,  விவசாயிகளை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் சுமார் 12 யூனியன் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

இதில் விவசாயிகளுக்கு கூட்டுபண்ணையம் குறித்த ஆலோசனைகளும், விவசாயிகள் குழுவாக இணைந்து உழவர் உற்பத்தியாளர்கள்,  சுயதொழில் கூட்டுபண்ணையம் முறையில் தொழில் தொடங்க அரசு சார்பில் மானியம் பெற்று,  விவசாயிகள் தங்களது  சுயதொழில் கூட்டுபண்ணையம் முறையில் தொழிலில் லாபம் ஈட்டும் வகையில் பயிற்சியும் மற்றும் கூட்டுபண்ணையம் முறையில் ஏற்கனவே தொழில் செய்து வரும் விவசாயிகளையும் பார்வையிட்டனர். 

விவசாயிகள் பார்வையிட்ட இடங்களான உழவர் உற்பத்தியாளர்களின் ஆயக்குடி கொய்யா வளர்ப்பு முறை, உரக்கம்பனி, பல்பொருள் அங்காடி, பெட்ரோல்நிலையம் மற்றும் பூ சந்தை  போன்ற உழவர் உற்பத்தியாளர்களின் கூட்டுபண்ணையம் முறையில் அவர்கள்  தொழில் செய்யும் முறையையும்  பார்வையிட்டனர். 

விவசாயிகள் கூறியதாவது: நாங்கள் இங்கு வந்து (27,28,29/11/2019) மூன்று நாட்கள் முடிந்தது. இதில் நாங்கள் குழுவாக இணைந்து தங்களது சுயதொழிலில் முதலீடு எவ்வாறு செய்ய வேண்டும், மற்றும் அரசின் மானியம் பெறுவது, அதனை தொடர்ந்து அதிக லாபம் ஈட்டி தொழிலில் முன்னேறுவது போன்ற ஆலோசனைகளும், இம்முகாம் விவசாயிகள் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாகவும், மிகவும் பயனுள்ளதாகவும், மற்றும் மகிழ்ச்சியாகவும்  இம்முகாம் இருந்தது என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

P. வேல் முருகன், 

தமிழ் ஒளி செய்தியாளர். 

+919159555110