உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தேனீக்கள் அச்சுறுத்தல்

உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தேனீக்கள் அச்சுறுத்தல்
தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனை ஊழியர்கள்
உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தேனீக்கள் அச்சுறுத்தல்

மதுரை :உசிலம்பட்டி 

உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை 4மணி அளவில் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் திடீரென தேனீக்களின் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இது  அங்கிருந்த நோயாளிகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள், உசிலம்பட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தவுடன், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அங்கிருந்த தேனீக்களை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதில் சில வீரர்களுக்கு தேனீக்கள் கொட்டின. 

சுமார் நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அங்குள்ள 90%தேனீக்களை விரட்டினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இருப்பினும் நோயாளிகளுக்கு தேனீக்ககளால் எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் வீரர்கள் செயல்பட்டனர். 

இதனால் அங்குள்ள நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையின் ஊழியர்களுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். 

திரு. பா. வேல்முருகன், 

தமிழ் ஒளி செய்தியாளர். 

+919159555110