உசிலம்பட்டி அருகே அரசுப்பேருந்து விபத்து டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

இன்று காலை 9 மணிக்கு உசிலம்பட்டியிலிருந்து ஏர்வாடிக்கு அரசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது பேருந்தை நல்லுத்தேவன் என்கிற டிரைவர் ஓட்டி வந்தார் கொங்கபட்டி அருகே வந்தபோது முன்னால் சென்ற  உசிலம்பட்டி நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் 5 பேரை ஏற்றிச்சென்ற  நகராட்சி வாகனம் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக  பேருந்தை டிரைவர் வலதுபுறமாக திருப்பினார் 
பேருந்து அருகே இருந்த வாட்டா் எம்எஸ் சர்வீஸ் கட்டிடத்தின் முன்னால் இருந்த மரத்தில் மோதி அருகே இருத்த இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தி கட்டிடத்தின் மீது மோதியது இதனால் முன்பக்க கட்டிடம் சேதமடைந்தது பேருந்து ஓட்டுனர் நல்லுத்தேவன் சாமர்த்தியமாக செயல்பட்டதால் யாருக்கும்  உயிர்சேதம் ஏற்படவில்லை உசிலம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்

வேகத்தை குறைத்தால் விபத்தை குறைக்கலாம்