உசிலம்பட்டி ஆர் டி ஒ அதிரடி நடவடிக்கை

உசிலம்பட்டி ஆர் டி ஒ அதிரடி நடவடிக்கை
உசிலம்பட்டி ஆர் டி ஒ அதிரடி நடவடிக்கை

உசிலம்பட்டியில் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றி எடுத்த ஆர்.டி.ஓ.

உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி, சேர்வைபட்டியில் அமைந்துள்ள தனியார் விவசாய கல்லூரி கோவில் நிலம் மற்றும்  அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர்  ராஜ்குமார் அவர்களிடம்  புகார் மணு கொடுக்கப்பட்டது அதனையடுத்து ஆர்.டி.ஒ. ராஜ்குமார் அவர்கள் ஆறு பேர் சேர்ந்த தனி சர்வேர் குழு ஒன்றை நியமித்தது அதன் அடிப்படையில்   நில அளவையாளர்கள் இன்று கல்லூரியில் நில அளவீடு செய்ததில் வடக்கு மலை மகாலிங்க சுவாமி திருத்தலத்திற்க்கு பாத்தியப்பட்ட சுமார் 40-ஏக்கருக்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமித்து வேலி போடப்பட்டிருந்தது கோவில் நிலத்தில் இருந்த வேலிகளை பொதுமக்கள் அப்புறப்படுத்தினர்.
இந்நிகழ்வில்
தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகமகாராஜா மற்றும் ஊராட்சி மன்ற துனை தலைவர் மணிமாறன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மற்றும்  இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்