பெங்களூர் நிமான்ஸ் தமிழ் நண்பர்கள் பொங்கல் கொண்டாட்டம் ஐபிஎஸ் அதிகாரி பங்கேற்பு

பெங்களூர் நிமான்ஸ் தமிழ் நண்பர்கள் பொங்கல் கொண்டாட்டம் ஐபிஎஸ் அதிகாரி பங்கேற்பு
பெங்களூர் நிமான்ஸ் தமிழ் நண்பர்கள் பொங்கல் கொண்டாட்டம் ஐபிஎஸ் அதிகாரி பங்கேற்பு
பெங்களூர் நிமான்ஸ் தமிழ் நண்பர்கள் பொங்கல் கொண்டாட்டம் ஐபிஎஸ் அதிகாரி பங்கேற்பு

பிப்ரவரி -7

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் பொங்கல் கொண்டாட்டம்

பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நிமான்ஸ் மருத்துவமனை உள்ளது இதில் 350க்கும்ஸமேற்பட்ட தமிழர்கள் மருத்துவர்களாக செவிலியர்களாக மற்றும் அலுவலக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நிமான்ஸ் தமிழ் நண்பர்கள் குழு எனும் பெயரை உருவாக்கி கடந்த நான்கு ஆண்டுகளாக பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

அதேபோல் கடந்த 4ம் தேதி நிமான்ஸ் கிளப் விளையாட்டு மைதானத்தில் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் தொடங்கியது கனிமொழி குழுவினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர் நிர்வாக அதிகாரி முருகன் வரவேற்புரை ஆற்றினார் 

மொழியும் வழியும் எனும் தலைப்பில் தமிழ் ஒளி தமிழரசன் தமிழர்களின் சிறப்புக்களை பற்றி பேசினார்

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கூடுதல் காவல்துறை இயக்குனர் முருகன் ஐபிஎல் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் தமிழர்கள் எங்கே இருந்தாலும் அந்த மாநில மக்களோடு இணக்கமாக நட்புடன் பழகி  அந்தந்த மாநில வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறினார் அதனைத் தொடர்ந்து தஞ்சை நாட்டுப்புற கலைஞர்களின் தவில் நாதஸ்வரம் மயிலாட்டம் நடை பெற்றது

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது   பொருளாளர் வினோத்குமார் ஆண்டறிக்கையை வாசித்தார் மூத்த உறுப்பினர் தேவசகாயம் நன்றியுரை ஆற்றினார் தமிழர்களின் பாரம்பரிய உடையான் ஆண்கள் வேட்டி சட்டையுடன் உம் பெண்கள் அனைவரும்.சேலை உடுத்தி வந்தனர்.