உசிலம்பட்டியில் ஏசி யுடன் இயங்கும் நகைக்கடைகள் காற்றில் விடப்பட்ட கட்டுப்பாடு

உசிலம்பட்டியில் ஏசி யுடன் இயங்கும் நகைக்கடைகள் காற்றில் விடப்பட்ட கட்டுப்பாடு
உசிலம்பட்டியில் ஏசி யுடன் இயங்கும் நகைக்கடைகள் காற்றில் விடப்பட்ட கட்டுப்பாடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி

உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை புரட்டிப்போட்ட கொரானா அச்சம் காரணமாக அமெரிக்காவே ஆடிப்போன நிலையில் மத்திய மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகள் என எதைப்பற்றியும் கவலை இல்லாமல் அச்சமில்லாமல் உசிலம்பட்டியில் உள்ள சில நகைக்கடைகளில் குளு குளு ஏசி யுடன் சமூக இடைவெளியைக் கூட கடைப்பிடிக்காமல் படுஜோராக வியாபாரம் செய்து வருகின்றனர் உசிலம்பட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு இன்னும் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அடுத்தவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி நமக்கு வந்தால் அது ரத்தம் என்ற வடிவேலு காமெடியை நினைவு படுத்துகிறது உசிலம்பட்டி மக்களின் செயல்

அரசும் அதிகாரிகளும் இவர்கள் மீது இன்னும் கொஞ்சம் அதிகமாக அக்கறை செலுத்த வேண்டும் என்பதே நமது எண்ணம்