அதிமுகவுடன் கூட்டணியா! ஏன்? கதிரவன் விளக்கம்

அதிமுகவுடன் கூட்டணியா!  ஏன்? கதிரவன் விளக்கம்
அதிமுகவுடன் கூட்டணியா!  ஏன்? கதிரவன் விளக்கம்
அதிமுகவுடன் கூட்டணியா!  ஏன்? கதிரவன் விளக்கம்

அநடைபெற உள்ள 2024 பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வருகின்றனர் இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் திடிரென அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 

 சுற்றறிக்கை
 நாள்: 06.03.2024 

 நமது கட்சியின் சார்பில் கடந்த 19. 01 .2024   ஆம் தேதி மதுரையில்  நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் 12 பேர் அடங்கிய நமது கட்சியின் மத்திய தலைமை செயற்குழு  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்  இந்த கூட்டத்தில் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த எனது  தலைமையில் மாநிலத் தலைவர் தோழர் C. முத்துராமலிங்கம் TUCC மாநில பொதுச் செயலாளர் தோழர் R. திருப்பதி ஆகியோர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழு தேர்வு செய்யப்பட்டது மேலும் தமிழ்நாட்டில் நமது  கட்சியை மதிக்கின்ற கட்சிகளோடு கூட்டணி  குறித்து பேச்சுவார்த்தை நடத்த இக்குழுவிற்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதன் பின்பு 2024 பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற மத்திய குழு மற்றும் மத்திய தலைமைச் செயற்குழு கூட்டத்திலும் எனது தலைமையில் தமிழ்நாட்டில் 2024  பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க  முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதன்பின் 2024 பிப்ரவரி 19ஆம் தேதி இட்ட  தேசிய பொதுச் செயலாளர் தோழர் G. தேவராஜன்  அவர்களின்   சுற்றறிக்கையின்  அடிப்படையிலும்  எனது தலைமையிலான தேர்தல் பணிக்குழு  தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில்  தேசியத் தலைவர்  தோழர்.நரேன்  சட்டர்ஜி  தேசிய பொதுச் செயலாளர் தோழர் G.தேவராஜன்  தேசிய செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான G.R.சிவசங்கர்  ஆகியோர்களுக்கு தகவல் தெரிவித்து தமிழ்நாட்டில் கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த நான் அழைத்த போது  தேசியத் தலைவர்  தோழர். நரேன் சட்டர்ஜி அவர்கள் மேற்கு வங்க நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான  வேலைகளில்  இருந்ததால் வர இயலவில்லை என்று கூறிவிட்டார்  தேசிய செயலாளரும்  TUCC தேசிய பொதுச் செயலாளருமான G.R. சிவசங்கர் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக தமிழ்நாட்டுக்கு வர இயலாத நிலை ஏற்பட்டது தேசிய பொதுச் செயலாளர் தோழர் G. தேவராஜன் அவர்களை அழைத்தபோது அவர்  கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தையை எனது (P.V. கதிரவன்) தலைமையிலேயே நடத்துமாறு கூறியதுடன் இரண்டாம்  சுற்று பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறிவிட்டார்  இந்நிலையில் நம் கட்சி ஏற்கனவே எடுத்த முடிவின்படி மதிக்கின்ற  கட்சியோடு கூட்டணி என்ற தீர்மானத்தின் படி நம்  கட்சியை மதித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த AIADMK  கட்சியோடு இன்று 06.03.2024 ஆம் தேதி  கூட்டணி குறித்து மரியாதைக்குரிய முன்னாள் முதல்வரும் AIADMK கட்சியின் பொதுச் செயலாளருமான திரு .எடப்பாடி பழனிச்சாமி அவர்களைச் சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் பேச்சுவார்த்தையின் போது நமது கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் G. தேவராஜ் அவர்கள் செல்போன் மூலமாக  கூட்டணி குறித்து எங்கள் முன்னிலையில் எடப்பாடி யார் அவர்களிடம் பேசினார்  இந்தப் பேச்சுவார்த்தையில் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சிக்கு தேனி பாராளுமன்ற தொகுதி அல்லது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி இதில் ஏதேனும் ஒன்றை நமது கட்சிக்கு கூட்டணி சார்பில் சிங்கம் சின்னத்தில் போட்டியிட ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக நமது கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் எனது அன்பான வேண்டுகோள் நமது கட்சி பற்றியோ நமது கட்சி தலைமை பற்றியோ யாரும் தவறான தகவல்களை பொதுத்தலங்களில் பகிர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் எவரேனும் மீறி நமது கட்சிக்கு எதிராக பேசுவதோ பொது தலங்களில் பதிவிடுவதோ செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் எச்சரித்து தெரிவித்துக் கொள்கிறேன்

 நன்றி வணக்கம்
 ஜெய்ஹிந்த்

 இங்கனம்
 P.V.கதிரவன் B.Com.LLB.  ex  MLA
 தமிழ் மாநில பொதுச் செயலாளர் /தேசியத் துணைத் தலைவர்
 அகில இந்திய பார்வர்டு பிளாக்
        06.03.2024