உசிலம்பட்டியில் கோவிலை இடித்து கடைகள் பிஜேபியினர் முற்றுகை பரபரப்பு

உசிலம்பட்டியில் கோவிலை இடித்து கடைகள் பிஜேபியினர் முற்றுகை பரபரப்பு
உசிலம்பட்டியில் கோவிலை இடித்து கடைகள் பிஜேபியினர் முற்றுகை பரபரப்பு
உசிலம்பட்டியில் கோவிலை இடித்து கடைகள் பிஜேபியினர் முற்றுகை பரபரப்பு

உசிலை  செப்- 18

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது சந்தை திடல் இது ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது

இதன் மேற்கு பகுதியில் விநாயகர் கோயில் ஒன்று பல ஆண்டுகளாக இருந்து வந்தது பராமரிப்பு இல்லாததால் அந்த சிலையை யாரோ திருடிச்சென்றுவிட்டனர் அதன் அருகிலேயே என இராமர் கோயில் ஒன்றும் இருந்து வந்தது இந்த நிலையில் நேற்று பிற்பகல் எந்த வித முன்அறிவிப்பும் இன்றி திடீரென ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அந்தப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது அருகில் இருந்த விநாயகர் கோயில் ,மற்றும் எர ராமர் கோவிலும் இடிக்கப்பட்டது தகவல் அறிந்த மதுரை புறநகர் மாவட்ட பாஜகவின் துணைத் தலைவர் சொக்கநாதன் மாவட்ட செயலாளர் மொக்கராசு தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கோவில் இடிக்கப்பட்ட பகுதியில் முற்றுகையிட்டனர் உடனடியாக உசிலம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சார்பில் பக்கத்திலேயே புதிய கோவில் கட்டித்தருவதாக  உறுதியளிக்கப்பட்டது ஏற்கனவே கோவில் இருந்த இடத்திலேயே கோவில் கட்ட வேண்டும் என பாஜகவினர் கேட்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் மனு கொடுத்தனர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர் அதனால் பல மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது