துணை நிற்கும் பனைமரம், கிராமப்புறங்களில் நீர் நிலைகளை பாதுகாக்க உசிலம்பட்டி அருகே இளைஞர்கள் ஆர்வம்

துணை நிற்கும் பனைமரம், கிராமப்புறங்களில் நீர் நிலைகளை பாதுகாக்க உசிலம்பட்டி அருகே  இளைஞர்கள் ஆர்வம்
பனை விதைகள்

உசிலம்பட்டி: ஜோ.மீனாட்சி புரம் 

இக்காலத்தில் பனைமரத்தின் பயன்கள் பற்றி அறியாதவர்கள் யாரும் கிடையாது, நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து  இக்காலத்து வரை  இயற்கை பானமாகவும், இதன் மேற்புறம் இலைகள் மட்டும்மின்றி   இதன் அனைத்து பகுதிகளிலும் பயன்படும் வகையில் பனைமரம் விளங்குகிறது. நீர்நிலைகளான ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் போன்றபகுதியில்  மண் அறிப்பு, நிலத்தடி நீர் மட்டம் உயர்வு, போன்ற இயற்கை பாதுகாப்பிற்கு பெரும் பங்கு வகிக்கிறது. இதன் பற்றிய விழிப்புணர்ச்சியும் நாடுமுழுவதும் தோன்றிவருகிறது. 

இதனை தொடர்ந்து உசிலம்பட்டி அருகே ஜோ. மீனாட்சி புரம் கிராமத்தில் உசிலம்பட்டி விவசாயிகள் சங்கம் உதவியுடனும், கிராமத்து இளைஞர்களின் முயற்சியினால் கண்மாயின் கரையோரத்தில் சுமார் ஐந்நூறு பனை விதைகள் நடப்பட்டன. தொடா்ச்சியாக கண்மாய்க்கரையின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை, காலை சரியாக 7.00 மணியளவில் திரு.பாண்டியராஜன்,ராஜசேகர், பாலமுருகன்,அருள்கனேசன்,ராமநாதன், வேல்முருகன்,பால்பாண்டி,வினோத்குமார்,தினேஷ் இளைஞர்களால் ஆரம்பித்து 10.00 மணியளவில் முடிக்கப்பட்டது. 

இளைஞர்கள் கூறியதாவது:

நாங்கள் அனைவரும் எங்களின் கிராமத்தில் நீர்நிலைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாங்கள் இந்த முயற்சியில் மிக ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளதாகவும்,  தொடர்ந்து பனைமரத்தின் பயன்களை மக்களுக்கு விழிப்புணர்ச்சியையும்,வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் இதனை பராமரித்தல் போன்ற இயற்கைவளத்துடன் தனது கிராமத்தின்  வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்றும் உறுதியளித்தனர்.  

திரு.வேல்முருகன், 

தமிழ் ஒளி செய்தியாளர்.