தேவர் கல்லூரி மாணவர்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகள் பங்கேற்பு

தேவர் கல்லூரியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மதுரை மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் மற்றும் உசிலம்பட்டி தாலுகா சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாமில் மாணவர்களுக்கான சுய முன்னேற்றம் குறித்த சிறப்பு கருத்தரங்கு நடந்து. 

விழாவிற்கு கல்லூரி செயலாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரவி முகாமை துவக்கி வைத்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பொன்ராம் வரவேற்று பேசினார். 
சிறப்பு முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்ட உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் எண் 2  ராஜேஷ் குமார் மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் எண் 1 மாரிமுத்து ஆகியோர் மாணவர்கள் மத்தியில் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய முன்னேற்றம், கீழ் படிந்து  சட்டத்தின் வழி நடத்தல் போன்றவை குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தினர். முகாமில் துணை முதல்வர்கள் தவமணி, ராமன்,பாண்டி, உதவி பேராசிரிபர்கள் வைரமணி, சதீஸ், ராஜேஸ்வரி, சூர்யா, சுபாஷ்  ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியை கீர்த்திகா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை  பேராசிரியைகள் சுசிலா, பொன்னம்மாள், அல்போன்சா நாகப்பிரியா, இந்துஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.