உசிலம்பட்டியில் குற்றச்சம்பவங்களை குறைக்க நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள்

மதுரை மாவட்டம் : உசிலம்பட்டி

2019 நவ-12 உலகத்தின்  மிகச்சிறந்த காவல்துறை எனும் பெருமையில் 2வது இடத்தைப்பெற்று சிறப்புடன் விளங்குவது நமது தமிழ்நாடு காவல்துறை என்பது அனைவரும் அறிந்ததே. 

பல்வேறு குற்றச்செயல்களில் திறம்படச்செயல்பட்டு விரைவாக குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தியிருக்கிறது  நமது காவல்துறை.

அதன் தொடா்ச்சியாக மதுரை மாவட்டகாவல்துறை துணை கண்காணிப்பாளா் உத்திரவில் உசிலம்பட்டி வட்டார காவல்துறை துணை கண்காணிப்பாளா் அவா்கள் மேற்பாா்வையில் உசிலம்பட்டி நகா்முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் நகாின் முக்கிய இடங்களான பொதுமக்கள்கூடும் இடங்கள், வா்த்தக பகுதிகள், திரையரங்க பகுதிகள், பள்ளி வளாகம்,மருத்துவமனை   போன்ற எல்லாபகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொறுத்தும்பணி விரைவாக நடைபெற்றுவருகிறது.

இதன் தொடா்ச்சியாக நகர்ப்புறங்களான உத்தப்பநாயக்கனூர் மற்றும் செல்லம்பட்டியுலும் விரைவில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தும்பணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில்  பொிதும் வரவேற்பைபெற்றுள்ளது. குற்றவாளிகள் இனி ஓடவும் முடியாது ஔியவும் முடியாது. 

இச்செய்தி  சமூக ஆர்வலர்களுக்கிடையே பாராட்டுகளையும் ஆதரவையும்   பெற்றுள்ளது. 

தமிழ்ஔி செய்தியாளா்     

பா. வேல்முருகன்