ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றிக்கு ஆர் பி உதயகுமார் அவர்கள் சிறப்பு பூஜை

பிப் 9

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு அவர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தலைமையில் அப்பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர் இது குறித்து கருத்து தெரிவித்த உதயகுமார் அவர்கள் அதிமுகவின் வெற்றி நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் தொடர்ந்து அதிமுகவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறினார் இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்