கொரானாவில் 67000கோடியை அள்ளி குவித்த அம்பானி

கொரானாவில் 67000கோடியை அள்ளி குவித்த அம்பானி
கொரானாவில் 67000கோடியை அள்ளி குவித்த அம்பானி

*கொரோனா பாதிப்பு முதலாளிகளுக்கு இல்லை. 4வாரத்தில் ரூபாய் 67,000 கோடி அள்ளினார் முகேஷ் அம்பானி அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் தகவல்*
கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்திற்கும் சென்று விட்டது.இந்திய மக்களும் வேலையிழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.ஆனால் இந்தியாவின் முதற்பெரும் பணக்காரான முகேஷ் அம்பானியின் கஜானாவுக்கு மட்டும் எந்தக் குறையும் இல்லை அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ரிஸ் பங்குகளில் உலகின் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு முதலீடு செய்து வருகின்றன ஏப்ரல் 22அன்று ரிலையன்ஸ் இன்டஸ்ரிஸ்சின் ஜியோ நிறுவனத்தில் 9.99சதவீத பங்குகளை ருபாய் 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.அதை தொடர்ந்து மே 3 அன்று சில்வர் லேக் நிறுவனம் 1.15 சதவீத பங்குகளை ரூபாய் 5ஆயிரத்து 656 கோடிக்கு வாங்கியது.கடைசியாக மே8 அன்று விஸ்டா நிறுவனம் 2.32 சதவீத ஜியோ பங்குகளை ரூபாய் 11 ஆயிரத்து  367 கோடிக்கு வாங்கியது இந்நிலையில் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் தற்போது 1.34 சதவீத ஜீயோ பங்குகளை ரூபாய் 6 ஆயிரத்து 598 கோடியே 38 லட்சம் ரூபாயக்கு வாங்கியுள்ளது இவற்றின் காரணமாக கொரோனா நெருக்கடிக்கு இடையிலும் கடந்த 4வாரத்தில் சர்வதேச பெரு நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 67 ஆயிரத்து 194 கோடியே 75 லட்சம் அளவிலான முதலீட்டை முகேஷ் அம்பானி அள்ளிக் குவித்துள்ளார் இதன் மூலம் தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார் ஆனால் அதே நேரம் ஆர்தர் டி.லிட்டில் நிறுவனம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் 12கோடி பேர் ஏழையார்வார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது பணம் மதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டி அமலாக்கத்தால் சரிந்து போயிருந்த இந்தியப் பொருளாதாரத்தை கொரோனா பாதிப்பு மேலும் சீர்குலைந்து விட்டது ஏற்றுமதி,இறக்குமதி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது .வேலையின்மை 3மடங்கு அதிகரித்துவிட்டது கோடிக்கனக்கான மக்கள் அன்றாட உணவிற்கே திண்டாட வேண்டிய நிலைமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது.மத்திய மதவாத பாஜக அரசோ இதை வாய்ப்பாக பயன்படுத்தி ஒட்டுமொத்த நாட்டையும் தனியார் முதலாளிகளுக்கு வேட்டைக்காடாக மாற்றும் வேலையில் இறங்கி இருக்கிறது. இந்நிலையில் தான் இந்தியாவில் ஏற்கெனவே இருக்கும் பொருளாதார பாதிப்பு கொரோனா தாக்கத்தின் காரணமாக மேலும் அதிகரித்து இந்தியாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 13கோடி 50லட்சம் பேர் வேலைகளுக்கு அபாயம் உள்ளதாக ஆர்தர் டி.லிட்டல் என்ற சர்வதேச மேலாண்மை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது அது மட்டுமன்றி இந்தியாவில் சுமார் 12கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள இந்த நிறுவனம் இந்த மாற்றத்தின் காரணமாக இந்திய மக்களின் நுகர்வுப் பொருட்கள் மற்றும் நுகர்வின் அளவுகள் குறையும் எதிர்காலத்திற்கு உத்தரவாதமற்ற மக்கள் முடிந்தளவில் செலவுகளைக் குறைத்து கையில் இருக்கும் சிறிய அளவிலான பணத்தைச் சேமிப்பின் பக்கம் திரும்பவே அதிகளவில் முயற்சி செய்வார்கள் என்றும் எதிர்க்கால விளைவுகளைப் பற்றி இந்நிறுவனம் அடுக்கியுள்ளது மேலும் நாட்டு மக்களின் தனி நபர் வருமானம் குறைத்து நாட்டின் ஜிடிபி அதன் வளர்ச்சியை அதிகளவில் பாதிக்கப்படும் 2020,2021 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.8 சதவீதம் அளவிற்கு சரியும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.சிறு நடுத்தர நிறுவனங்கள் எழைக்கள் கைகளில் பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்தால் தான் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு பாதைக்கு கொண்டு வர முடியும் மத்திய பாஜக அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் சாலையில் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும்,ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளையும் பொருளாதார நலிவையும் வேலையின்மையும்,வறுமையையும்,சட்ட உரிமைகளையும் அளித்தமைக்காக பாஜக மத்திய அரசு ஏழை மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் காலம் வெகுத் தொலைவில் இல்லை.சுயசார்புக் கொள்கையை அரிக்கும் ஆபத்தான போக்குடன் நம் கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றையும் தனியாருக்குத் தாரை வார்க்க அறிவிப்புக்கள் வெளியாகி இருக்கின்றன நாட்டில் மிகவும் முக்கியமான மருந்துத்துறை,பாதுகாப்புத்துறை போன்றவற்றில் ஏற்கனவே அவசர சட்டங்கள் மூலமாக படிப்படியாக தனியாருக்குத் தாரை வார்த்திட மதவாத பாஜக மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதனால் உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து ஏழைகளாக மாறிக்கொண்டே இருப்பார்கள் முகேஷ் அம்பானி போன்ற பாஜக ஆதரவு கார்ப்ரேட்கள் அள்ளிக் குவித்துக் கொண்டே இருப்பார்கள் இதற்கு எதிராக சனாதன,வகுப்புவாத பாஜக அரசை எதிர்த்து உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுப்பட்டு போராட முன்வர வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது