மாணவர்களை போராடதூண்டிவரும் பேராசிரியர்கள் உறக்கத்தில் கள்ளர்கல்வி நிர்வாகம் உசிலம்பட்டியில் அவலம்

மாணவர்களை போராடதூண்டிவரும்  பேராசிரியர்கள் உறக்கத்தில் கள்ளர்கல்வி நிர்வாகம் உசிலம்பட்டியில் அவலம்
மாணவர்களை போராடதூண்டிவரும்  பேராசிரியர்கள் உறக்கத்தில் கள்ளர்கல்வி நிர்வாகம் உசிலம்பட்டியில் அவலம்
மாணவர்களை போராடதூண்டிவரும்  பேராசிரியர்கள் உறக்கத்தில் கள்ளர்கல்வி நிர்வாகம் உசிலம்பட்டியில் அவலம்

மதுரை ஆக-16 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை மையமாக வைத்து செயல்பட்டுவருகிறது கள்ளர் கல்விக்கழகம் மதுரை தேனி திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இக்கழகத்திற்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளது

கல்வித்தந்தை என்று அழைக்கப்படும் மூக்கையா தேவர் ,விகேசி நடராஜன் போன்றோர்களால் ஏழை எளிய மாணவர்கள் பயனபெற வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டததுதான் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி இங்கு சுமார் 3000க்கும் அதிகமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர் இக்கல்லூரியின் முதல்வராக டாக்டர் ஒ.ரவி பதவி வகித்து வருகிறார் சில பேராசிரியர்களுக்கும் கல்லூரி முதல்வருக்கும்  முரண்பாடு ஏற்பட்டது எனவே முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி கடந்த ஆண்டு சில பேராசிரியர்கள் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட வைத்தனர் கல்லூரிகளின் மண்டல இயக்குனர் நேரில் வந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார் இந்த ஆண்டு புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் இதுவரை எந்த ஒரு கல்விக்கடணமும் வசூலிக்கப்படவில்லை என தெரிகிறது

இந்த நிலையில் இன்று காலை வகுப்பிற்கு வந்த மாணவர்களை இரண்டு பேராசிரியர்கள் வகுப்பில் இருந்து கட்டாயமாக வெளியே சென்று மீண்டும் போராட தூண்டியதாக தெரிகிறது சில மாணவர்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து கொண்டனர்  அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது 

1, எதற்காக இந்த போராட்டம்
2, கூடுதல் கட்ணம் என்றால் அரசு நிர்ணயித்த கட்டணத்தொகை எவ்வளவு
3, வேறு எந்தக்கல்லூரியிலாவது இதைவிட குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?
4 உங்களின் எதிர் பார்ப்பு என்ன?
என்று கேட்டபோது தெரியாது என்பதையே பதிலாக கூறிவிட்டு தங்களின் படிப்பு பாழாகிறதே என்பது கூட தெரியாமல் மாணவர்கள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியே சென்று விட்டனர் 

மாணவர்கள் படிப்பின் மீது அக்கறை செலுத்தாமல் மாணவர்களை போராடதூண்டிய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும் கல்லூரியில் ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்தாமல் குறட்டை விடும் கள்ளர்  கல்விக்கழக செயலாளர் வாலாந்தூர் பாண்டியன் தலைமையிலான நிர்வாகத்தின் செயல்பாடு கண்டிக்கத்தக்க வகையிலும் வருந்தத்தக்க வகையிலும் உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் விழித்துக்கொள்ளுவாரா வாலாந்தூர் பாண்டியன்? நடவடிக்கை இல்லை என்றால்?

வரும் கள்ளர் கல்விக்கழக தேர்தலில் வாலாந்தூர் பாண்டியனுக்கு இதன் பிரதிபலிப்பு தெரியவரும்   கல்விக்கழகம்.....?