சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை

சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை
சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை
சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை

கொரோனா வைரஸை உருவாக்கி உலகை அச்சுறுத்தும் சீனா - வின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
பிரதமர், முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை.

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறு.பார்த்திபன், நாகை ஒன்றியத் தலைவர் ஜோதி, ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், சிங்காரவேலு மற்றும் நிர்வாகிகள் நாகை மாவட்ட ஆட்சியர் வழியாக பிரதமருக்கும், முதல்வருக்கும் கோரிக்கை மனு ஒன்றினை வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி அவர்களிடம் அளித்துள்ள
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

-  சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள், பட்டாசுகள், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், 
சீன உணவு மற்றும் துணிமணிகள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும். 
சீன வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.


- திபெத் நாட்டை ஆக்கிரமித்துள்ள சீனாவிடம் இருந்து திபெத்தை சுதந்திர நாடாக பிரகடனம் செய்ய வேண்டும். திபெத் மக்களின் சுதந்திரம், கலாச்சாரம், பண்பாடு, திபெத்திய மொழி ஆகியவற்றை அழிக்கும் சீன கம்யூனிஸ்ட் அரசிடமிருந்து திபெத்தை பாதுகாக்க வேண்டும்.

- இந்தியாவிற்கு சொந்தமான சிவபெருமான் அருள்பாலிக்கின்ற புனிதமான மானஸரோவர் ஏரி மற்றும் திருக்கயிலாய மலையை சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு இந்திய மக்களுக்கு சொந்தமாக்க வேண்டும்.

- கொரானா வைரசை உருவாக்கி உலகை அச்சுறுத்தும் சீனாவின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.

- சிக்கிம், பூடான் ஒட்டியுள்ள இந்திய எல்லைப்பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை முறியடிக்க வேண்டும்.

- தமிழகத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள், நக்சல் அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்.

- அருணாசலபிரதேச மாநிலத்தை உரிமை கொண்டாடும் சீனா கம்யூனிஸ்ட் நாட்டை 
ஐ நா உறுப்பு நாடுகள் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

- தமிழகத்தில் சீனாவிற்கும், பாகிஸ்தானிற்கும் ஆதரவாக செயல்பட்டு வரும் கம்யூனிஸ்ட் சார்பு ஊடகங்கள் மீது தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 


உசிலை.P.M.தவசி.