சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் தமிழக அரசின் அலட்சியமும் கருத்தரங்கம்

சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் தமிழக அரசின் அலட்சியமும் கருத்தரங்கம்
சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் தமிழக அரசின் அலட்சியமும் கருத்தரங்கம்

✍️இன்று 18.7.2022

*சீர்மரபினர் நலச்சங்கம்* மற்றும்
 BC/MBC/DNT கூட்டமைப்பின்
*சமூகநீதி கூட்டமைப்பினர்* நடத்திய சர்வதேச மண்டேலா தின கருத்தரங்கம் *சாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் அமைப்பின் ஆணை* என்ற தலைப்பில் மதுரை அண்ணா நகரில் உள்ள அன்னை மஹாலில் நடைபெற்றது.

✍️நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் சுவராஜ் இந்தியாவின் நிறுவன தலைவர், பேராசிரியர் யோகேந்திர யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் முனைவர் இ.எம். சுதர்சன் நாச்சியப்பன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசகர் முனைவர் வி. பொன்ராஜ் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் உரையாற்றினர். 

✍️யோகேந்திரா யாதவ் பேசும்போது ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது மிகப்பெரிய மோசடி என்றும் குறைந்தது முழு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வில்லை என்றாலும் ஓபிசி மினி சாதிவாரிக் கணக்கெடுப்பாவது நடத்த வேண்டும். நீதிமன்றங்கள் பல ஆணையங்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்தும் இதுவரை செய்ய மறுப்பது தேசத்தின் வளங்களையும் நலன்களையும் அனுபவித்துவரும் ஒரு சிலரின் விஷமத்தனமான சூழ்ச்சியே. எனவே அனைத்து ஓபிசி மக்கள் ஒன்றிணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசை வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

✍️சுதர்சன் நாச்சியப்பன் அவர்கள் பேசும்போது இந்திரா சஹானி தீர்ப்பிற்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு மிக மிக அவசியமானது. அரசியல், அரசி, கல்வி, பொருளாதாரம், நீதிமன்றம் என்று எல்லா நிலைகளிலும் இதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயம். குற்றப்பரம்பரை சட்டம் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் மற்றும் விளிம்பு நிலை சமூகங்களுக்கு சமூக நீதி சென்றடைய உடனடியாக மத்திய மாநில அரசுகள்  சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.

✍️அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்கள் பேசும் போது சென்செஸ் மத்திய அரசின் பணி என்றாலும் மாநில அரசு அதைக் காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பு தட்டிக்கழிக்க முடியாது. புள்ளிவிவர சேகரிப்பு சட்டம் 2008ன் படி மாநில அரசு மக்கள் தொகை உட்பட சமூக கல்வி நிலை குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்க அதிகாரம் உள்ளது. காலம் கடத்துவது தமிழகம் அனுபவிக்கும் 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்தாக முடிந்துவிடும். 

✍️மூத்த பத்திரிகையாளர் அய்யனாதன் அவர்கள் பேசும் போது சமூக நீதி ஒரு சமூகத்துக்கு வழங்குவதால். பல ஏழை எளிய மக்கள் இதுவரை எந்த வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்றனர். எனவே மண்டேல நிறவெறியை ஒழித்தபோதும் இந்தியாவில் இருக்கும் சமூக அநீதியை  அழிக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் அதை மறுப்பது ஏமாற்று வேலை என்று பேசினார்.டாக்டர் நாகரத்தினம் வரவேற்புரையும்,பி ராமராஜன்  நன்றியுரையும் நிகழ்த்தினார். சீர்மரபினர் நலச்சங்கம் செயல் தலைவர் ராமசாமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

சமூகநீதிக் கூட்டமைப்பு
BC/MBC/DNT.
சீர்மரபினர் நலச்சங்கம்.